search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலி பணியிடம்"

    • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
    • 40 வயதுக்கு உள்பட்ட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூா்:

    திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஆற்றுப்படுத்துநா், உதவியாளா் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதில் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல், உளவியல், பொது சுகாதாரம், ஆற்றுப்படுத்துதலில் பட்டதாரி அல்லது முதுநிலை டிப்ளமோ ஆற்றுப்படுத்துதல் மற்றும் தொடர் பாடல் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    உதவியாளா் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளா் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான வாரியத்தில் இருந்து பட்டயப்படிப்பு, கணினி இயக்குவதில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 40 வயதுக்கு உள்பட்ட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவச்சான்று மற்றும் புகைப்படத்துடன் வரும் செப்டம்பா் 2ந்தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 305, 7 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய இணை மந்திரி தெரிவித்தார்.
    • மத்திய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மக்களவையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.

    மத்திய இணை மந்திரி ஜித்தேந்திர சிங் தனது பதிலில் மேலும் கூறுகையில், '2021 மார்ச் செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி மத்திய அரசுக்கு கீழ் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மற்றொரு கேள்விக்கு பதிலளித்த்த ஜிதேந்திர சிங், இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளது என தெரிவித்தார்.

    • என்.எ.எஸ்., பி.ஹெச்.எஸ். ஆகிய அனைத்து பதவிகளுக்குமான காலி ப்பணியிடங்களை பணிமூப்பில் குழப்பம் ஏற்படுத்தியது.
    • பாராபட்சமாக ஒரே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நலத்துக்கு டியில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலக சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் ஆர். பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட பொருளாளர் இராம்மோகன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர் தவபாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வரவேற்றார்.

    மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் 7.11.2008 அன்று ஒருங்கிணை க்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரிந்துவந்த அனைவருக்கும் முன்தேதி யிட்டு பதவி நிலையில் நடைமுறை ப்படுத்தாமல் பதவி உயர்வு க்கான தேர்ந்த பட்டியலை திருத்தி வெளியிடும்போது, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும், என்.எ.எஸ்., பி.ஹெச்.எஸ். ஆகிய அனைத்து பதவிகளுக்குமான காலி ப்பணியிடங்களை பின்பற்றாமல் மேலோட்ட மாக திருத்திய தேர்ந்த பட்டியலை வெளியிட்டு பணிமூப்பில் குழப்பம் ஏற்படுத்தியதை கண்டித்தும். எம்.டி.எம். சுகாதார ஆய்வாளர்களது ஊதியத்தை ரூ 20000 என உயர்த்தி வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டே அரசு ஆணைப்படி 267 -ன் படி 216 பேர் சுகாதார உதவியாளராக ஆக பணிபுரிந்து 1995-ல் சுகாதார ஆய்வாளர் நிலை 1 ஆக பதவி உயர்வு பெற்ற நபர்களுக்கு கடந்த.2016 முதல் பணியில் இளைய நபருக்கு பதவி உயர்வு வழங்கிய அதே தேதியில் பதவி உயர்வு மற்றும் இதர பலன்களை வழங்கியதைப் போன்று வழங்காமல், பாரபட்சமாக ஒரே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு மேற்கொண்டதை கண்டித்தும் பணியில் உள்ள அனைவருக்கும் பணி மூப்பு அடிப்படையில் ஹெச்.இ. பி.ஏ.பணியிடங்களுக்கான கவுன்சிலிங் நடத்த ஜியோ வலியுறுத்தியும் இக்கலந்தாய்வு முடிவடைந்த உடன் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 1 பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வலியுறுத்தியும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தப்பட்டது.முடிவில் மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

    கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும்.
    தாராபுரம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநர்அய்யப்பன் தலைமை வகித்தார்.

    கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பவேண்டும்.

    மேலும் 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் இளங்கோ, சங்க நிர்வாகிகள் மேகலிங்கம், தில்லையப்பன், மணிமொழி, வெங்கிடுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×